Monday, January 02, 2012

நிலவும் நானும்

Sunday, January 01, 2012

தெரிந்த விடயம் தானே.................. பகுதி 1


உலகம் வேகமாகச் சுற்றுகின்றது!
காலம் கடக்கின்றது.
நேரம் நகர்கின்றது.
உலகம் முன்னேறுகின்றது!
விஞ்ஞானம் வளர்ச்சி – உலகத்தை தாண்டி, விண்மண்டலத்தை தாண்டி
அதற்கு அப்பாலும் செல்லுகிறது.
ஏன்! விஞ்ஞானம் அணுவைத்துளைத்து அதில் உள்ள
கூறுகளையும் துளைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது!
கலத்தை ஆராய்ந்து, கருவை ஆராய்ந்து,
அதில் உள்ள பரம்பரை அலகினை ஆராய்கின்றது!
இன்னும் ஏதேதோ எல்லாம் செய்கின்றது..............!

இங்கு – நாங்கள் சிலர் மட்டும்
ஏதும் செய்யாதவர்களாக இருக்கின்றோம்!
முன்னையது – உலகின் பலம்!
பின்னையது பலவீனம்!
உலகின் ஆதாரம் – இளைஞர்கள்!
நாங்களும் இளைஞர்கள்தாம்!
சொல்லித்தான் அதுகூட சிலபேருக்கு ஞாபகம் வருகின்றது.
செயற்பட வேண்டியவர்களும் சாதிக்க வேண்டியவர்களும்
நாங்கள் தான்!
ஆனால் இப்போது நாங்கள் – நாங்களாக இல்லையே!

எங்களில் சிலர் தொலைக்காட்சிகளிலும் வீடியோக்களிலும் மூழ்கி இருக்கின்றனர். தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பப்படும் சில நிகழ்ச்சிகள் உணர்ச்சி பூர்வமாகவும் அறிவு பூர்வமாகவும் இருங்கின்றது என்பது உண்மையே. ஆனால் சாதிக்கப் பிறந்த இன்றைய இளைஞர்கள் வெறுமனே பொழுது போக்கு அம்சமான வீடியோப் படங்களில் இரவு பகலாக மூழ்கி இருப்பது கவலைக்குரியதொரு விடயம்.

இன்னும் சிலர் – நித்திரையெனும் செயற்கைக் கல்லறையினுள் தங்களைப் புதைத்துக் கொண்டிருக்கின்றார்கள்!

இன்னும் சிலர் – எங்கோ தங்களைப் பார்த்து சிரித்த அழகான பெண்களை நினைத்து உருகி அவர்களுக்கு பின்னால் திரிந்து அவர்களது நேர அட்டவணை எல்லாம் தங்கள் நேர அட்டவணைகளாக்கி நேரத்தை வீண்டிக்கிறார்கள்! காதலை நான் எதிர்க்கவில்லை!
அதற்காக இப்படியா...............!

இன்னும் சிலர் காதலிக்காமலேயே, காதல் தோல்விகளுக்கு உட்பட்டவர்களாக – சிகரெட், போதைப் பொருள், மது என்று சில ஆட்கொல்லிகளுக்கு அடிமைப்பட்டவர்களாக தங்கள் வாழ்க்கையை அழிக்கின்றனர்!

சாதனை புரியவேண்டியவர்கள் இப்படியே –
செத்துக் கொண்டிருக்கின்றேம்!
இளம் வயதில் சாதிப்பது – மிகச்சுலபம்!
வயது போனபின் அனுபவமே எஞ்சும்!
முன்னோர்களின் அனுபவங்களை அறிந்து நாம் முன்னேறுவோம்!

சில பேர் முணுமுணுக்கிறார்கள்........
”தெரிந்த விடயம் தானே ஏன் அலசுகிறீர்கள்?”
தெரிந்த விடயம் தான்!
ஆனால் –
நீ தெரிந்து கொண்டால் மட்டும் போதாது நண்பனே!
ஏதாவது செய்................
உன்னிடம் திறமை இருக்கின்றது!
சாதனை புரி!
உனக்கு உதவ – நாம் இருக்கின்றோம்.
இன்னும் பலர் இருக்கின்றார்கள்!
நாங்கள் சாதிப்போம்.
உலகோடு நாங்களும் முன்னேறுவோம்!

துள்ளி எழுந்தது காற்று....


அனைவருக்கும் இனிய 2012 புதுவருட வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் இந்தவருடம் இனிய வருடமாக அமைய ஆண்டவனை பிரார்த்திகிறேன்.

வளமை போலே இந்த வருடமும் எனது ஆயிரம் கனவுகளுடன் விடிகிறது. அவற்றில் ஒன்று எனது பதிவுகளை அடிக்கடி இடவேண்டுமென்பதும் தூங்கியிருக்கும் இவ்வலையை புதுப்பிக்க வேண்டும் என்பதாகும்.


இந்தவருடம் நான் ஆரம்பிக்கவிருக்கும் பல புது வாழ்வியல் மாற்றங்களுடன் இதற்கும் நேரம் இருக்கும் என்று நம்புகிறேன். பல புதிய எண்ணங்களுடன் அடிக்கடி வருவேன்.


நன்றியும் வணக்கங்களும்

Sunday, January 02, 2011

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும் புதிய இணையத்தள அறிமுகமும்


அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 2011 இல் நீங்கள் மேலும் சிறக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
தமிழ் பார்வை என்ற வலைத்தளம் ஒன்றை எனது நண்பர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள். சுட்டி:
தங்கள் கருத்துக்களையும் ஆக்கங்களையும் அனுப்பினால் நன்றி உடையவர்களாயிருப்போம் (tamillookweb@gmail.com)
.
வலைத்தளம் பிடித்திருப்பின் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்

நன்றி





Thursday, January 07, 2010

அதிற்சியூட்டும் விளம்பரம்

தலைவர் பிரபாகரனின் தந்தையின் மரணச்சேய்தியை அறிந்து மேலதிக தகவல் அறிய ஒரு லங்காசிறீ இணையத்தளம் சென்ற எனக்கு இந்த அதிச்சி கிடைத்தது.

தமிழர்களின் விளம்பரப் பணத்தில் குளிர் காயும் லங்காசிரீ இணையத்தளம் மகிந்தருக்கு வாக்களிக்கச் சொல்லும் விளம்பரம் பிரபாகரனின் தந்தையின் மரணச்சேய்திக்குஅருகிலேயே....! (படத்தை பார்க்க). our people wish for a bright future....! shocking.......


Thursday, August 20, 2009

முருகன் கோவில் தேரோட்டம்…...!

”கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பர் முன்னோர்கள். நான் புலம்பெயர்ந்து வந்து நிறைய அலைந்த பின் நிரந்தரமாக குடியேறிய இடத்தில் இருந்து 5 மைல் (என்ன தமிழ்?) தொலைவிற்குள் 5 கோவில்கள் உள்ளது பெரிய விடையம் தான்.

தமிழர் சென்ற இடமெல்லாம் அவர்களுடன் சென்று குடியேறி
அருள் பாலிக்கும் தெய்வங்களுள் முதன்மையானவர் முருகக் கடவுள்.
அந்தவகையில் லண்டன் ஈஸ்ட்காம் பகுதியில் மிகவும் அருமையான
ஒரு முருகப்பெருமான் ஆலயம் அமைந்துள்ளது.
1970 களின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இக்கோவில் 2005ம்
ஆண்டு ராஜகோபுரமும் கருங்கல் கட்டிடத்துடனும் கூடிய வளற்சி கண்டது.
இந்த ஈஸ்ட்காம் முருகன் கோவில் வருடாந்த மகோற்சவம் கடந்த இருவாரங்களாக நடைபெற்று வரு
கின்றது. ஊரில் இருந்து வெளியேறிய பின் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு
பிறகு தேர்த்திருவிழாவிற்கும் சப்பரத்திருவிழாவிற்
கும் போயிருந்தேன். அங்கு கிளிக்கிய படங்களை
காண்க..




சப்பரத்திருவிழா



































தேர்த்திருவிழா


Tuesday, August 04, 2009

திரு(தீ)மணம்

ஓமகுண்டத்தில் தீ வளர்த்து
மணமுடித்து கொடுக்கிறார் - பெண்ணை
வாழ்க்கை முழுக்க தொடர்கிறது
அதே தீ ......அடுப்பில் !

Sunday, August 02, 2009

மயிலிறகே..மயிலிறகே....!

சுட்டும் விளி அழகை
அதிகாலை சூரிய உதயத்தை
பால்வீதியின் வடிவத்தை
ஓளித்து வைக்கும் அழகே!

அழகான வண்ணத் தோகை மயிலின்
முழு உருவத்தையும்
உன்னுள்ளே புதைத்து வைத்திருக்கும்
தாற்பரியத்தை எங்கே கற்றாய்?

எனனைப் பார்த்து புன்னகைத்தது போதும்
உயிர் கொண்டு ஏழுந்து வா....!


(படம் : மருமகன் புருக்ஷோத்)

Friday, July 31, 2009

ஓவியம்...!


காகிதமும் நானும்
உணர்ச்சிகளை பகிர்ந்தோம்
வெகு நேரமாய்...!

இலக்கியமும் யதார்த்தமும்!

படர இடம் தேடியது
முல்லைச் செடி - அதனை
வாள் கொண்டு வெட்டி
மாட்டுக்கு உணவாக்கினர்

குளிரில் நடுங்கியது
தேகைமயில் - அதன்
இறகுகளை பிடுங்கி
சந்தைக்கு அனுப்பினர்.

ஆராட்சி மணி தேடியது
அறிவுள்ள மாடு - அதை
கொடுமையாக கொன்று
உணவாகிப் புசித்தனர்.

சிலம்போடு வந்தாள்
கண்ணகி - அவளை
அலங்கோலப் படுத்தி
சிறையினில் அடைத்தனர்.

ஆனால்
சகுனிக்கு அமைதிப் பரிசு!
கூனிக்கு ஓஸ்கார் விருது!