சில நாட்களுக்கு முன்னர் எனக்குத் தெரிந்த தமிழ் கடை ஒன்றில் இலங்கைப் பழச்சாறு, உலர் உணவுகள், கடல் உணவுகள் குவிக்கப் பட்டு இருந்ததைப் பார்த்து விட்டு கடை முகாமையாளரிடமே இது பற்றிக் கேட்டேன். “சில சாமான் விக்காட்டி அண்ணன் கடையையே இழுத்து மூட வேண்டியது தான். சனம் வேற கடை பார்த்து விடும்” என்ற பதில் வந்தது. அதே நேரம் அங்கு வந்த ஒரு அக்கா

இன்னும் ஒரு கடை முதலாளி என்னடா என்றால் “அவங்களுக்கு ( இலங்கை) உதவி வளங்கும் நாடுகள் மில்லியன் பில்லியன் என்று கொட்டிக் கொடுக்குது. அதுகளுக்கு முன்னால் ஏற்றுமதிப் பொருட்களால் போகும் அன்னிய செலவாணி ஒன்றும் பெரியதிலை” என்று ரெக்னிக்கலாய் பதில் கூறினார். அவருக்கு சிறுதுளி பெருவெள்ளம் என்று தெரிவித்து விட்டு வந்தேன். இவரது கடையிலும் தகரத்தில் அடைத்த மீன் மற்றும் TVP சோயா வகைகள் நிறைய அடுக்கப்பட்டிருந்தன.
எனது நண்பர் ஒருவரும் இலங்கை சாமான்களை புறக்கணிப்போம் என்று சொல்லி விட்டு அவற்றிக்கு மாற்றீடாக இந்தியாவில் இருந்து வரும் பொருட்களை தானே பாவிக்க வேண்டி வரும் என்றும் இந்தியா எங்களுடைய பிரச்சினையை கையாண்ட விதம் பிழை என்றும் வாதாடினார்.
இவற்றிக்கு எனக்கு பதில் தெரியவில்லை. ஆனால் எனக்கு ஒன்று மட்டும் தெரியும். இலங்கைப் பொருட்களையும் – அவை நேரடி இறக்குமதியோ அல்லது வெளிநாடுகளில் பைகளில் அடைக்கப்பட்டவையோ – சேவைகளையும் ( முக்கியமாக விமானப் போக்குவரத்து) முற்று முழுதாக அனைத்து புலம்பெயர் தமிழ்ர்களும் அவர்களை

இனி வரும் பதிவுகளில் எவ்வளவு அனனிய செலவாணியை இலங்கை பெறுகிறது எனபது பற்றியும் மாற்றீட்டு போருட்கள் மற்றும் என்ன மாதிரி நண்பர்களுக்கு விழிப்பு உணர்வு ஊட்டுவது பற்றியும் பார்ப்போம்.
1 விமர்சனங்கள்:
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
Post a Comment