ஆசிரியர்
கலாசாலையிலே தான் பயின்று – பல
ஆசான்களை
உருவாக்கியவர் எம் தந்தை.
தாய்மொழியாம்
தமிழதனை பலபேர்க்கு
தடையின்றி கற்பித்த கல்விக்கடல்.
நிமிர்த்து
அவர் நடை, நேரியது அவர் பார்வை
சரியானதை
சரியென்று வாதிடும் அவரது நா.
குறுகியது அவர் தோற்றம், மகா மேரு
மலையிலும் பெரியது அவரது மனம்.
வையத்துள்
வாழ்வாங்கு வாழவேடுமென
மற்றோற்கு
உதாரணமாய் வாழ்ந்தவர் அவர்
மேன்மக்கள்
படங்கள் தனை தேடித்தேடி
வீட்டுக்கூடத்தில்
அலங்கரித்தவர் அவர்
அவர்
சித்திரம் தீட்டிய வெற்றுத்தாள் கதை சொல்லிற்று
அவர் அணிந்ததனால்
வெள்ளைவேட்டி கர்வப்பட்டது
அவர் பாடம் கேட்டவர் அறிஞர்கள் ஆனார்கள்
அவர் சொற்கேட்டோர் உத்தமர் ஆகினர்
அவர்
எங்களுக்கு புகட்டிய இதிகாசங்களுக்கு அளவில்லை
அவர் காட்டிய
பாசம் இலக்கியத்தில் இடம்பெறவில்லை
அவர்
வேண்டிவைக்காத நல்ல தமிழ் புத்தகம் இல்லை
அவரை கொண்டாடத
குரும்பசிட்டி உறவுகளும் இல்லை
எமக்கு தந்தை, என் தாய்க்குப் பதி
அவர்
தம்பிதங்கைக்கு நல் அண்ணன்
ஊரோர்ருக்கு ஆசிரியர்
த க செல்லையா
எனும் நாமங்கொண்ட
ஒர் நல்ல
மனிதர்.
3 விமர்சனங்கள்:
//த க செல்லையா எனும் நாமங்கொண்ட
ஒர் நல்ல மனிதர்//
அப்பாக்கள் பிள்ளைகளுக்கு நல்லவராக இருப்பது இயல்பே!
தங்கள் அப்பாவின் படத்தில் அவர் எல்லோருக்கும் நல்லவராக இருந்திருப்பார் போல் உள்ளது.
அற்புதம். இத்தகு உள்ளதால் உயர்ந்த மனிதர்களை எங்கு காண்பது.
//அப்பாக்கள் பிள்ளைகளுக்கு நல்லவராக இருப்பது இயல்பே!//
-உண்மை தான் யோகன் - சில வருடங்களுக்கு முன்னார் மறைந்த அப்பா பற்றி எழுத நீண்ட நாட்களாக விருப்பம் இருந்தது. இன்றுதான் நிறைவேரிற்று.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
பெயர் குறிப்பிடாத நண்பருக்கும் நன்றிகள்
Post a Comment