Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

சில நாட்களுக்கு முன்னர் தமிழ்மணத்தில் இருந்து சில சுட்டிகளை சொடுக்கிய போது வலைமனைகள் திறந்தாலும் தளங்களை பார்க்கமுடியாமல் இருந்தது. ஏனெனில் அத் தளங்கள் தன் பாட்டிலே அடிக்கடி refresh பண்ணியபடியே இருந்தன. நான் என் கண்ணில் தான் எதோ பிழை என்று போட்டு போய் படுத்து தூங்கிவிட்டேன்.

இன்றைக்கும் அதுபோலவே நடந்தது. அதனாலே தான் இந்தப்பதிவு. அனேகமாக எதாவது plugin களில் பிரச்சனை இருக்கும் என நம்புகிறேன். Crome, Firefox, IE எல்லாவற்றிலும் இதே மாதிரி தான். எனது கணனியிலும்  கண்ணிலும் பிழை இல்லை என்றே தெரிகிறது. சுட்டிகளை தனியே எடுத்து பாவித்தாலும் இந்த் effect வருகிறது.

சம்பந்தமான பதிபவர்களுக்கு பின்னூட்டம் அனுப்பவே முடியவில்லை. இப்படி பிரச்சனை தெரிந்த சில சுட்டிகளை தந்திருக்கிறேன். பதிபவர்கள் படித்தால் வலைமனைகளை சரி பார்த்து கொள்ளவும். கூகிள் கூகிள்...இல தேடிப்பார்த்தேன் இது பற்றி ஏதும் தகவல்கள் கிடைக்கவில்லை.

இச் சுட்டிகளில் சிலவற்றிற்கு நான் முன்பு போயிருக்கிறேன். அப்போது சிக்கல் இலாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரச்சனை எனக்கு மட்டும் தெரிகிறது என்றால் மன்னித்து மறக்கவும். உங்களில் யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டமிடுங்கள்.

ஒகோ புரடக்சன் : http://ohoproduction.blogspot.co.uk
தமிழா தமிழா : http://tvrk.blogspot.co.uk
கவிதை வீதி: http://kavithaiveedhi.blogspot.co.uk




இன்று தீபாவளிப் பண்டிகை. தமிழர் குடும்ப சமுக கலாசார பண்பாட்டு நாட்களில் முக்கியமானதாக இருக்கும் தினம் இது. தீபங்களை வரிசையாக (வளி) வைத்து அழகு படுத்தும் பண்டிகை என்ற காரணப் பெயராக தீபாவளி அமைகிறது. உலகத்தில் வாழும் அனைத்து இந்துக்களும்  நாடு பேதமின்றி கொண்டாடுவது இந்த ஒரு பண்டிகைதான். இப்போது இந்துக்கள் வாழும் பல் புலம் பெயர் நாடுகளில் அன்னிய நாட்டவரும் சேர்ந்து கொண்டாடும் காட்சிகளும் காண முடிகிறது.

கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை அழித்த நாள் என்று தென் இந்தியாவிலும் தசரத இராமன் இராவணை வதம் செய்து நாடு திரும்பிய நாள் என்று வட இந்தியாவிலும் இதனை கொண்டாடுவார்கள். மொத்ததில் ஒரு நன்மை நடந்த நாளாகவே இத் திருநாள் கருதப்படுகிறது. தீபங்கள் இருளை விரட்டி ஒளியைத் எல்லா இடமும் பரப்புவதாலே தீபாவளியில் தீபங்கள் முக்கிய இடம் பெருகிறது.

இப்பண்டிகை வட நாட்டவரின் பண்டிகை என்றும் தமிழனாகிய நரகாசுரனை  அழிக்கப்பட்ட நாளாதலால் இதை கொண்டாடக் கூடாது என்றும் ஒரு சிலர் கருதுகின்றனர். கிருஷ்ணரை தமிழ் இந்துக்களின்  கடவுளாக ஏற்றால் பண்டிகையையும் ஏற்கவேண்டும் என்பது என் வாதம்.

முன்பு ஊரில் தந்தை தாய், ஏழு சகோதரங்களுடன் ஒரே வீட்டில் வாழ்ந்த் நேரம் தீபாவளி வந்தால் வீடே அல்லோல கல்லோலப்படும். காலையில் நான் சிறியவன் என்பதால் ஒரு புதுச்சட்டை கிடைக்கும். எல்லோரும் நீராடி புது உடுப்பு போட்டு ஐயாவுடன் கோவில் சென்று முத்துமாரி அம்மன் தரிசனம் முடித்து வர வீட்டில் அக்கா பொங்கள் செய்திருப்பா. சாப்பிட்டு இனித்திருப்போம். அனேகமாக நெருங்கிய சொந்தங்கள் வீடு வந்து போவினம்.

இப்ப வேலை நாட்களில் என்றால் வேலை முடித்து வந்து கோவிலுக்கு போய்வந்து ஒரு பொங்கலேடு பண்டிகை முடிந்துவிடும்.  சில வருடங்களாக ஒரு பெரிய தட்டம் நிறைய தண்ணிர் நிரப்பி நடுவில் ஒரு கிருஷ்ணர் வைத்து சுத்திவர பூவும் சிறிய மெழுகுதிரிகளும் வைத்து பூஜை அறையை ஒளியூட்டுவது என் பழக்கம். தீபஙகள் வாழ்க்கைக்கு ஒளி தரும் என்ற நம்பிக்கை தான்!

அனைவருக்கும் இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

1 – அனேகமாக பேய் பெண்ணாக இருக்கும் ஆனால் அடித்தால் பேயடியாக இருக்கும். மலையாள மாந்திரிகர்களை தவிர யாருக்கும் கட்டுப்படாது. பேய் கடவுள் சிலையை கண்டால் நடுங்கும். இந்த பேய் விரட்டும் மாந்திரீகர்கள் எப்பவும் பேயைவிட பயங்கரத் தேற்றமாக இருப்பினம்.


2 –துப்பாக்கி குண்டுகள் ஆட்களை பார்த்துத் தான் தாக்கும். கதாநாயகர்களை ஒன்றுமே செய்வதில்லை. மற்றவையை ஐம்பதடி தூரத்தில் நின்று சுட்டாலே உயிரை குடிக்கும்.

3 – இளம் பெண்கள் எப்பவும் ஒன்றில் சரியான கோபக்காரியாகவோ அல்லது வெகுளியாகவே ( லூசு ) இருப்பினம். அனேகமான தமிழ் பெண்கள் கவர்ச்சியாகவே உடுப்பு போடுவினம்.

4- அரசியல்வாதிகள் எப்பவும் வேட்டி கட்டியிருப்பினம். அனேகமான அரசியல்வாதிள் குண்டாக இருப்பினம். காசெ’ண்டால் கொலையும் செய்வினம் அவை.


5 – கோவில் போகும் பெண்கள் சேலை மட்டுமே அணிவார்கள். கட்டாயம் கையில் அர்ச்சனை தட்டு எடுத்துச் செல்வர்

6 – ஒரு ஆண் ஒரு பெண்ணின் எந்த பாகத்தை தொட்டாலும் பெண் கனவு காண்பது வழக்கம். கனவில் எந்த சாரிகள் ஆபரணங்கள் அணிந்திருந்தேன் என்று ஞாபகம் வைத்து பிறகு மற்றவைக்கு சொல்வது அவர்கள் வழக்கம். கனவில் மட்டும் அவர்களை எங்கே தொட்டாலும் அவர்களுக்கு பிரச்சனையில்லை.

7- நீதிபதிகள் எப்பவும் பயந்தவர்கள். வக்கீகள் காசுப் பேய்கள்.

8. அனேகமான ஆண்கள் சரியான அடிதடி காரர். ஆ ஊ எண்டேலே கையை நீட்டி விடுவினம். அனேகமான அடியாட்கள் சோம்பேறிகள், பயந்தவர்கள்.

9. பணக்கார்ர் எல்லோரும் எமாற்றுக்காரர்கள். அனோகமான பணக்காரரின் பணம் கருப்பு.

10 அனேகமான ரோட்டில் ஸ்பீட் லிமிட் இல்லை. எவ்வளவு தூரம் ஓடினாலும் காருக்கு பெற்றோல் மட்டும் முடியாது

11  அரிவாட்களை வீடுகள், வியாபாரத் தலங்களிலும்  செருகிவைப்பது தமிழர்கள் வழக்கம்.

12. என்ன பிரச்சனை என்றாலும் யாரும் சொல்லாமலே காவல் துறை வந்துவிடும். ஆனால் பிரச்சனை முடிந்தபின்னர் தான் எப்பவுமே வருவார்கள். காவல் துறை யாரையும் எப்போதும் என்னவும் செய்யல்லாம்.

13. எல்லா ஊர் எல்லையிலும் தவறாமல் ஒரு ஐயநார் கோவில் இருக்கும். அங்கு ஈசியாக புடுஙக்க் கூடியதாக சூலங்கள் நட்டிருப்பினம் (இது கொஞ்சம் பழசோ?)

14. வடிவான பெண்களுக்கு எப்பவும் ஒரு வடிவில்லாத அல்லது ஒரு வெகுளிப் பெண் நண்பியாக இருப்பா. அந்த நண்பி எப்பவும் ஒரு வடிவிலாத அல்லது ஒரு வெகுளிப் பையனை மணப்பது வழக்கம்.

15. சில பல்கலைக் கழகங்களிலும் காலேஜ்களிலும் எவ்வளவு அரியர்ஸ் வைச்சாலும் வீட்டை அனுப்ப மாட்டினம். காலேஜ்களில் வயதெல்லை இல்லை.


16. கடத்தல் கார டான்கள் எத்தனை கொலையும் செய்யல்லாம். அது தெரிய வராது. கடைசியில் ஒரு ஈ, காக்காவை அடிக்கும் போது மாட்டுவினம்.

17.  அனேகமான பார்களில் பெண்களின் நடனம் சர்வ சாதாரணம். யாரும் எப்போதும் சும்மாவே போய்வரலாம்.

18 நல்ல பாடல்கள் பின்ணணியில் போனால் பிள்ளைகள் அதி விரைவாக வளருவினம், ஆண்டி அரசனாகலாம். குக்கிராமம் நகரம் ஆகலாம்.



19. ஒத்த இரட்டையர்கள்  எப்பவும் வேறு வேறு தோற்றத்தில் இருப்பர். எப்பவும் ஒருவர் நல்லவராகவும் ஒருவர் கெட்டவராகவும் இருப்பது வளமை.



ஆமா உங்களுக்கும் இதுபோல கனக்கத் தேன்றுமே? பின்னூட்டத்தில் எழுதிவிடுங்கோ!!


புகைப்படத் தொழிலின் அடுத்த கட்டம் சினிமாகிராப் (Cinemagraphas) என்று அழைக்கப்படும் அசையும் புகைப்படங்களாகும். புகைப்படங்களின் சில பகுதிக்கு மட்டும் உயிர் கொடுத்து படங்களின் நிஜத்தன்மையை இன்னும் கூட்ட இந்த தொழில் நுட்பம் உதவுகிறது. 

நியூ யோர்க்கின் இரண்டு புகைப்படத்துறைத் தலைகள் சேர்ந்து உலகத்திற்கு கொடுத்தது இந்த தொழில் நுட்ப்பம். ஒரே படமாக (வீடியோ அல்ல) இருப்பதால் வலைத் தள பாவனைக்கு உகந்ததாக இருப்பதோடு இதன் அசையும் சிறிய பகுதிகள் முலம் புகைப்படத்தை இலகுவாக மனதில் பதிய வைக்க இயலும்.

புகைப்படத்தை முதலில் எடுத்து அதே நேரம் படத்தில் அசைவதாக காட்டப்படும் பகுதிகளை மட்டும் அசைத்து வீடியோவும் எடுத்து பின்னர் போட்டோ சொப் மூலம் இணைத்தே இப்படங்கள் உருவாக்கப் படுகின்றன. மிகவும் நுட்பமான புகைப்பட கருவிகளால் இந்த படங்கள் எடுக்கப்பட வேண்டும். 

இத் தொழில் நுட்பம் இந்தியாவுக்கு வந்தால் விரைவில் சினிமா போஸ்ரரிலேயே ரஜனியின் மானாரிசங்களை காணாலாம்.

கீழே சில படங்கள் உங்கள் பார்வைக்கு. நிழல் மற்றும் கண்ணாடி விம்பங்களில் கூட அசைவை உற்று நேக்குங்கள்.  சில படங்கள் பல நாட்கள் எடுக்கிறதாம் செய்து முடிக்க!







கந்தையா அண்ணை கனகாலமாக ஒவ்வொரு வெள்ளி இரவும் மதுபான சாலைக்கு (Pub) வருவார். அவர் தனிய வாறது மட்டுமில்லாமல் மூன்று பைந் பியர் (pint of beer) வேண்டி  மாறி மாறி ஒவ்வொரு கிளாசிலில் இருந்தும் அவரே குடிப்பது எல்லாருக்கும் வேடிக்கையாக இருக்கும்.

இப்பிடி வினேதமான பழக்கத்தை பார்த்த அக் கடையின் உதவியாளர் தனது ஆச்சரியத்தை கட்டுப்படுத்த முடியாமல் கந்தையா அண்ணையிடம் கேட்டார். அதுக்கு அவர் சொன்ன பதில் ` எனக்கு  இரண்டு உயிர் நண்பர்கள் இருந்தனர். ஊரை விட்டு வேறு நாடுகளுக்கு போகும் போது நாங்கள் எடுத்த முடிவு இது. எந்த நாட்டில் இருந்தாலும் நாங்கள் சேந்து இருப்பது போல் கிழமையுயில் ஒரு நாள் இப்படி குடிப்பதாக ஒரு சத்தியம் செய்திருக்கிறேன். அவையும் அப்பிடியே செய்வினம்`  உதவியாளர் இப்படி வித்தியாசமான ஒரு ஆள் இந்த உலகத்திலே இருக்கிறார்களா என்று வியந்தபடி போனார்.

கனகாலமாக இது தொடர்ந்த்து.

சில வருடங்களின் பின்னர் ஒரு நாள் கந்தையா அண்ணை மூன்றுக்கு பதிலாக இரண்டு பியர் மட்டுமே வாங்கி மாறி மாறி குடித்தார். அதை கண்ட கடை உதவியாளர் கண் எல்லாம் கலங்க கந்தையா அண்ணைக்கு கிட்ட போய் கேட்டார். உங்கள் இரு நண்பர்களில் ஒராளுக்கு எதாவது நடந்துவிட்டதா? என்று கேட்டார்.

கந்தையா அண்ணையின் பதில் சொன்னார் `அடடா அப்பிடி நினைத்துவிட்டீங்களா? அவங்கள் எல்லாம் சுகமாய்த்தான் இருக்கிறாங்கள் நான் தான் டொக்ரர் சொன்னார் என்று குடிப்பதை நிறுத்தி விட்டேன்.`

தடால்.......!