கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை அழித்த நாள் என்று தென் இந்தியாவிலும் தசரத இராமன் இராவணை வதம் செய்து நாடு திரும்பிய நாள் என்று வட இந்தியாவிலும் இதனை கொண்டாடுவார்கள். மொத்ததில் ஒரு நன்மை நடந்த நாளாகவே இத் திருநாள் கருதப்படுகிறது. தீபங்கள் இருளை விரட்டி ஒளியைத் எல்லா இடமும் பரப்புவதாலே தீபாவளியில் தீபங்கள் முக்கிய இடம் பெருகிறது.
இப்பண்டிகை வட நாட்டவரின் பண்டிகை என்றும் தமிழனாகிய நரகாசுரனை அழிக்கப்பட்ட நாளாதலால் இதை கொண்டாடக் கூடாது என்றும் ஒரு சிலர் கருதுகின்றனர். கிருஷ்ணரை தமிழ் இந்துக்களின் கடவுளாக ஏற்றால் பண்டிகையையும் ஏற்கவேண்டும் என்பது என் வாதம்.
முன்பு ஊரில் தந்தை தாய், ஏழு சகோதரங்களுடன் ஒரே வீட்டில் வாழ்ந்த் நேரம் தீபாவளி வந்தால் வீடே அல்லோல கல்லோலப்படும். காலையில் நான் சிறியவன் என்பதால் ஒரு புதுச்சட்டை கிடைக்கும். எல்லோரும் நீராடி புது உடுப்பு போட்டு ஐயாவுடன் கோவில் சென்று முத்துமாரி அம்மன் தரிசனம் முடித்து வர வீட்டில் அக்கா பொங்கள் செய்திருப்பா. சாப்பிட்டு இனித்திருப்போம். அனேகமாக நெருங்கிய சொந்தங்கள் வீடு வந்து போவினம்.
இப்ப வேலை நாட்களில் என்றால் வேலை முடித்து வந்து கோவிலுக்கு போய்வந்து ஒரு பொங்கலேடு பண்டிகை முடிந்துவிடும். சில வருடங்களாக ஒரு பெரிய தட்டம் நிறைய தண்ணிர் நிரப்பி நடுவில் ஒரு கிருஷ்ணர் வைத்து சுத்திவர பூவும் சிறிய மெழுகுதிரிகளும் வைத்து பூஜை அறையை ஒளியூட்டுவது என் பழக்கம். தீபஙகள் வாழ்க்கைக்கு ஒளி தரும் என்ற நம்பிக்கை தான்!
அனைவருக்கும் இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
2 விமர்சனங்கள்:
உங்களுக்கு என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
மிகவும் நன்றிகள் பால கணேஷ் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
Post a Comment