1 – அனேகமாக பேய் பெண்ணாக இருக்கும் ஆனால் அடித்தால் பேயடியாக இருக்கும். மலையாள மாந்திரிகர்களை தவிர யாருக்கும் கட்டுப்படாது. பேய் கடவுள் சிலையை கண்டால் நடுங்கும். இந்த பேய் விரட்டும் மாந்திரீகர்கள் எப்பவும் பேயைவிட பயங்கரத் தேற்றமாக இருப்பினம்.
2 –துப்பாக்கி குண்டுகள் ஆட்களை பார்த்துத் தான் தாக்கும். கதாநாயகர்களை ஒன்றுமே செய்வதில்லை. மற்றவையை ஐம்பதடி தூரத்தில் நின்று சுட்டாலே உயிரை குடிக்கும்.
3 – இளம் பெண்கள் எப்பவும் ஒன்றில் சரியான கோபக்காரியாகவோ அல்லது வெகுளியாகவே ( லூசு ) இருப்பினம். அனேகமான தமிழ் பெண்கள் கவர்ச்சியாகவே உடுப்பு போடுவினம்.
4- அரசியல்வாதிகள் எப்பவும் வேட்டி கட்டியிருப்பினம். அனேகமான அரசியல்வாதிள் குண்டாக இருப்பினம். காசெ’ண்டால் கொலையும் செய்வினம் அவை.
5 – கோவில் போகும் பெண்கள் சேலை மட்டுமே அணிவார்கள். கட்டாயம் கையில் அர்ச்சனை தட்டு எடுத்துச் செல்வர்
6 – ஒரு ஆண் ஒரு பெண்ணின் எந்த பாகத்தை தொட்டாலும் பெண் கனவு காண்பது வழக்கம். கனவில் எந்த சாரிகள் ஆபரணங்கள் அணிந்திருந்தேன் என்று ஞாபகம் வைத்து பிறகு மற்றவைக்கு சொல்வது அவர்கள் வழக்கம். கனவில் மட்டும் அவர்களை எங்கே தொட்டாலும் அவர்களுக்கு பிரச்சனையில்லை.
7- நீதிபதிகள் எப்பவும் பயந்தவர்கள். வக்கீகள் காசுப் பேய்கள்.
8. அனேகமான ஆண்கள் சரியான அடிதடி காரர். ஆ ஊ எண்டேலே கையை நீட்டி விடுவினம். அனேகமான அடியாட்கள் சோம்பேறிகள், பயந்தவர்கள்.
9. பணக்கார்ர் எல்லோரும் எமாற்றுக்காரர்கள். அனோகமான பணக்காரரின் பணம் கருப்பு.
10 அனேகமான ரோட்டில் ஸ்பீட் லிமிட் இல்லை. எவ்வளவு தூரம் ஓடினாலும் காருக்கு பெற்றோல் மட்டும் முடியாது
11 அரிவாட்களை வீடுகள், வியாபாரத் தலங்களிலும் செருகிவைப்பது தமிழர்கள் வழக்கம்.
12. என்ன பிரச்சனை என்றாலும் யாரும் சொல்லாமலே காவல் துறை வந்துவிடும். ஆனால் பிரச்சனை முடிந்தபின்னர் தான் எப்பவுமே வருவார்கள். காவல் துறை யாரையும் எப்போதும் என்னவும் செய்யல்லாம்.
13. எல்லா ஊர் எல்லையிலும் தவறாமல் ஒரு ஐயநார் கோவில் இருக்கும். அங்கு ஈசியாக புடுஙக்க் கூடியதாக சூலங்கள் நட்டிருப்பினம் (இது கொஞ்சம் பழசோ?)
14. வடிவான பெண்களுக்கு எப்பவும் ஒரு வடிவில்லாத அல்லது ஒரு வெகுளிப் பெண் நண்பியாக இருப்பா. அந்த நண்பி எப்பவும் ஒரு வடிவிலாத அல்லது ஒரு வெகுளிப் பையனை மணப்பது வழக்கம்.
15. சில பல்கலைக் கழகங்களிலும் காலேஜ்களிலும் எவ்வளவு அரியர்ஸ் வைச்சாலும் வீட்டை அனுப்ப மாட்டினம். காலேஜ்களில் வயதெல்லை இல்லை.
16. கடத்தல் கார டான்கள் எத்தனை கொலையும் செய்யல்லாம். அது தெரிய வராது. கடைசியில் ஒரு ஈ, காக்காவை அடிக்கும் போது மாட்டுவினம்.
17. அனேகமான பார்களில் பெண்களின் நடனம் சர்வ சாதாரணம். யாரும் எப்போதும் சும்மாவே போய்வரலாம்.
18 நல்ல பாடல்கள் பின்ணணியில் போனால் பிள்ளைகள் அதி விரைவாக வளருவினம், ஆண்டி அரசனாகலாம். குக்கிராமம் நகரம் ஆகலாம்.
19. ஒத்த இரட்டையர்கள் எப்பவும் வேறு வேறு தோற்றத்தில் இருப்பர். எப்பவும் ஒருவர் நல்லவராகவும் ஒருவர் கெட்டவராகவும் இருப்பது வளமை.
ஆமா உங்களுக்கும் இதுபோல கனக்கத் தேன்றுமே? பின்னூட்டத்தில் எழுதிவிடுங்கோ!!
4 விமர்சனங்கள்:
சூப்பரு
நன்றிகள் ஹாரி!.வருகைக்கும் கருத்துக்கும்
KaMaditharpar.:)))
நன்றிகள் தனிமரம்
Post a Comment