நான்:
நீண்ட காலத்திற்கு பிறகு தமிழ்படம் பார்க்க திரையரங்கு செல்ல முடிந்தது. தவிர இந்தப் படத்திற்கும் எனக்கும் இரண்டு சிறப்பு தொடர்புகள். நான் முதல் முறையாக தமிழ் படம் வெளிவந்த முதல் நாளே பார்த்தது. அடுத்தது முதல் முறையாக விஜயின் படம் திரையரங்கில் பார்த்தது!. 9 மணி படத்திற்கு எட்டு மணிக்கே சரியான சனம். இலண்டனில் எல்லா திரையரங்குகளிலும் டிக்கட் முதல் நாளே விற்று முடிந்து விட்டதாம் [எந்திரனுக்கு பிறகு இது தான் முதல் தடவை இப்படி நடந்ததாம்].
திரையரங்கு நிறைய ஆட்களுடன் இருந்து படம் பார்த்து சரியான பம்பலாக இருந்தது. விஜய் பாட்டுடன் ஆரம்பபமாகின்ற காட்சியில் பாட்டிகளில் வெடிக்கிறதையும் யாரே வெடிக்க வைத்து காகித மழையும் பொழிந்தனர். ஒவ்வொரு விஜய் சீனுக்கும் ஓ போட்டனர் லண்டன் விஜய் ரசிகர்கள். நான் படங்களை தனியே பொழுது போக்கிற்காக மட்டுமே பார்ப்பதால் எனக்கு படம் பிடித்திருந்தது. விஜய் படத்தில் கூட லொள்ளுகளை எதிர் பார்த்து போனதால் லொஜிக் மீறல்கள் தெரியவில்லை.
விஜய்
வாவ், நண்பன் பட்த்தின் பின்னரான எதிர்பார்ப்பை சரியாக தந்திருக்கிறார் விஜய். அலட்டல் இல்லாத நடிப்பு, அருமையான நடனம், வயதாகாத உடற்கட்டு என நல்ல கீரோக்கான் தகுதிகள் இருக்கு. நல்ல இயகுனர்களின் விதியாசமான படங்களை எடுத்து நடித்தால் இன்னொரு வட்டம் வரலாம் என்பது என் கருத்து. கடைசிக் கட்டத்தில் சுளுக்கு எடுக்கும் காட்சியில் கில்லி பட பாதிப்பை தவிர்த்திருக்கலாம்.
துப்பாக்கி:
இந்த ஆண்டில் பெரிய மாஸ் கீரோக்களின் வெற்றிப் படங்கள் பெரிதாக ஏதும் இல்லாத்தால் துப்பாக்கி நன்றாகவே வெடிக்கிறது. இந்த நேரம் வேறு போட்டிப் படங்கள் இல்லாத்தும் வெற்றிக்கு காரணமாக இருக்கலாம். தொலைக்காட்சியில் [திரையரங்கு factor இருக்காது] பார்த்தால் சாதாரணாமான படமாக இருக்குமோ தெரியாது.
பாட்டுகள் பறவாயில்லை. எல்லாம் முன்பே கேட்ட மாதிரி இருந்தன. ஒளிப்பதிவு அபாரம். கதை கிதை எல்லாம் தமிழ் படங்களில் கேட்ககூடாது ஆமா! அப்புறம் அழுதுவிடுவேன்!
இறுதியாக, குண்டு வைக்கிற வில்லன வாற படங்களில் எல்லாம் ஒரு குறித்த சமையத்தவரை காட்டுவதை இனியாவது தவிர்த்தால் நல்லம்.
எனது மதிப்பெண்கள் 62/100.
படம் இன்னும் பார்க்கவில்லை என்றால் திரையில் பார்க்கலாம். பார்க்க முதல் நான் எழுதிய முன்னேட்டத்தை படித்து பார்க்கலாம். முருகதாஸ்சுக்கு நல்லகாலம் நான் எழுதிய பஞ் ஒண்டும் படத்தில் வரவில்லை....! (வழக்கு போட்டிருப்போம்ல?)
0 விமர்சனங்கள்:
Post a Comment