தலைவர் இருக்கிறாரா
இல்லையா?
ஒருநாள் வருவாரா
இல்லையா?
தமிழ் ஈழம்
சாத்தியமா இல்லையா?
போராட்டம் அழிய
என்னகாரணம்?
ஆராச்சி செய்பவர்களே!
எங்களுக்கு இதைவிட
மிகவும் முக்கியமான
பணி உள்ளது
உறவுகளே!
புலத்தில் வாழும்
எமது
அடுத்த தலைமுறையை
பாருங்கள்
அவர்கள் கதைக்கும்
மொழிகள் எத்தனை?
அவர்கள் பழகும்
நட்புக்கள் எத்தனை நாட்டவர்?
அவர்கள் படித்த
பாடங்கள் எத்தனை?
அவர்கள் இல்லாத
துறைகள் எது?
ஆயுதங்களை விடவும்
பலமான
ஆயிரம் வழிகள் உண்டு
இளைய தலைமுறைக்கு
நாட்டை மீட்கும் பொறுப்பும் உண்டு
ஊடகத்துறை
பற்றி நன்கு அறிந்தோற்கு
உணவு மட்டும்
ஊட்டாமல் - விடுதலை
உணர்ச்சியையும் ஊட்டுவோம்
பலதைப் பற்றியும்
வாதிடுவோர்க்கு
சுதந்திரம்
பற்றியும் போதிப்போம்
அவர்களின் அப்பு
ஆச்சியும்
பாட்டனும் பூட்டனும்
பூட்டனின் பூட்டனும்
கமம் செய்து
வாழ்ந்த மண்
அவர்கள் பரம்பரை
ஆண்ட மண்
அண்ணன் அக்காக்கள்
பலர்
உயிர் கொடுத்து
காத்தமண் - அது
அவர்களின் உருத்து மண் என்றும்
அங்கு வாழும்
உறவுகள்
அவர்களின் வேர்கள்
என்றும்
அங்கிருக்கும் அடர்ந்த
மரங்கள்
அவர்களின் பாட்டன்
பாட்டி
கை பட்டவை
என்றும்
தெரியப்படுத்துங்கள்
புரியப்படுத்துங்கள்
அன்பான உறவுகளே!
தமிழர் தாயகம்
அது என்றும்
எதிரி ஆக்கிரமித்த பகுதி எது என்றும்
எங்கள் வரலாறு தொன்மையானதென்றும்
எங்கள் பண்பாடு பெருமையானதென்றும்
நீங்கள் தேடி அறிந்துகொள்ளுங்கள்
பின்னர்
பின்வந்தோர்க்கு கற்றுக்கொடுங்கள்
படங்களும் உண்மையில்லை – நெடுமையான
நாடகங்களும் உண்மையில்லை
நாங்கள் நாடு இழந்தது நிதர்சனம்
- அதை
வீட்டு பாடமாய் புகட்டி வாருங்கள்
நேரமில்லை நட்புக்களே!
தமிழன் தாயகத்தில் பிறக்கும்
ஆக்கிரமிப்பாளன் பிள்ளை நாளை
தானே இன் நிலத்தின் மகன் என்பான்
புலத்தில வாழும்
உங்கள் பிள்ளையை எவன் என்பான்!
நாளைய சந்ததிக்கு
உணர்வை ஊட்டுங்கள்
உணர்வை ஊட்டுங்கள்
தர்மம் எதுவென்று
தாராளமாய் போதியுங்கள்
தாராளமாய் போதியுங்கள்
அவர்களில் இருந்து
வருவான்
நாளைய தலைவன் –
ஒருவரல்ல
ஒராயிரமாய்.
ஒவ்வொருவரில்
இருந்தும்
ஒராயிரமாய்
வருவான்
தலைவன்
0 விமர்சனங்கள்:
Post a Comment