படர இடம் தேடியது
முல்லைச் செடி - அதனை
வாள் கொண்டு வெட்டி
மாட்டுக்கு உணவாக்கினர்
குளிரில் நடுங்கியது
தேகைமயில் - அதன்
இறகுகளை பிடுங்கி
சந்தைக்கு அனுப்பினர்.
ஆராட்சி மணி தேடியது
அறிவுள்ள மாடு - அதை
கொடுமையாக கொன்று
உணவாகிப் புசித்தனர்.
சிலம்போடு வந்தாள்
கண்ணகி - அவளை
அலங்கோலப் படுத்தி
சிறையினில் அடைத்தனர்.
ஆனால்
சகுனிக்கு அமைதிப் பரிசு!
கூனிக்கு ஓஸ்கார் விருது!
இலக்கியமும் யதார்த்தமும்!
குரும்பையூர் மூர்த்தி | Friday, July 31, 2009 | குறிச்சொற்கள் ஈழம், கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
6 விமர்சனங்கள்:
யதார்த்தத்தில் மனிதாபிமானம் அற்று போனது
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்ப!
இயல்பான இனிய கவிதை.
அது சரி கூனிக்கு ஒஸ்கார் விருதா? யாரைச்சொல்றீங்கள்?
சாத்தானின் ஆட்சியில் பிணம் தின்னும் சாத்திரங்கள்... கவிதை,கோபம் உண்மையானது. ஆனால் நிகழ்வோ சோகமானது
cherankrish : வருகைக்கு நன்றி..எப்பவே ராமன் முதுகில் கல் உருண்டை வைத்து அடித்தற்க்காய் அவனை 14 வருடம் காடாளாச் செய்தவள்.....கூனி...யோசித்துப் பாருங்கள்
அரங்கப்பெருமாள் : வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//நிகழ்வோ சோகமானது//
உண்மை தான் எல்லாவற்றிக்கும் காலத்திடம் பதில் இருக்கிறது
Post a Comment